sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கன்வார் யாத்திரை பாதையில் இறைச்சி கடைகளை மூட முடிவு

/

கன்வார் யாத்திரை பாதையில் இறைச்சி கடைகளை மூட முடிவு

கன்வார் யாத்திரை பாதையில் இறைச்சி கடைகளை மூட முடிவு

கன்வார் யாத்திரை பாதையில் இறைச்சி கடைகளை மூட முடிவு


ADDED : ஜூலை 11, 2025 02:59 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டப்படி, கன்வார் யாத்திரை செல்லும் பாதையில் உள்ள இறைச்சி கடைகளை அடைக்க வேண்டும் என யாரும் கூற முடியாது. எனினும், கடந்த சில ஆண்டுகளாக, கன்வார் யாத்திரை செல்லும் பாதையில் உள்ள இறைச்சி கடைகளை அதன் உரிமையாளர்களே முன்வந்து அடைக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் பாயும் கங்கை நதியில் இருந்து புனித நீரை எடுத்து வந்து, தங்கள் சொந்த ஊர்களில் உள்ள சிவன் கோவிலில் அபிேஷகம் செய்வதை, கன்வார் யாத்திரை மேற்கொள்ளும் வட மாநில மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டிற்கான கன்வார் யாத்திரை இன்று துவங்கி, வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, பல வட மாநிலங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டில்லி கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கபில் மிஸ்ரா இதுபற்றி கூறும் போது,''கன்வார் யாத்திரை செல்லும் பகுதிகளில் இருக்கும் இறைச்சி கடைகள் மூடப்படும்,'' என கூறியிருந்தார்.

அவரின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், எம்.சி.டி., எனப்படும் டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கன்வார் யாத்திரை செல்லும் பாதையில் உள்ள இறைச்சி கடைகளை இன்று முதல் மூட உள்ளோம் என கூறுவது தவறு. முனிசிபல் சட்டங்களில் அதற்கு இடமில்லை. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக கன்வார் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள இறைச்சி கடைகளை அவர்களாகவே மூடி வைத்துள்ளனர்.

அதுபோல, எங்களின் வட்டார அலுவலகங்களுக்கு அறிவுறுத்தி, சட்ட விரோதமாக ஆங்காங்கே விலங்குகளை பலியிடக் கூடாது என கூறியுள்ளோம். கடைகளை திறந்திருப்பதன் மூலமாக, பிற மதத்தினரின் மனம் புண்படும் படி செய்யக் கூடாது என கேட்டுள்ளோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டில்லி மேயர் ராஜா இக்பால் சிங் கூறும் போது,''கன்வார் யாத்திரை செல்லும் வழியில் உள்ள இறைச்சி கடைகளை தாங்களாகவே மூடி பலரும் தயாராக உள்ளனர். இந்த புனிதமான நாட்களில் அவற்றை மூடி வைத்திருக்குமாறு கேட்டுள்ளோாம்,'' என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:

மாநிலத்தில் 25 கன்வார் முகாம்கள் அமைக்கப்படும். அவற்றில், 24 மணி நேரமும் டாக்டர்கள் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளோம். மேலும், அழைப்பின் படி, சம்பவ இடத்திற்கு செல்லும் 10 மருத்துவ பணியாளர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன், 62 உதவி குழுக்கள், 12 பல் சிகிச்சை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புனித யாத்திரை செல்லும் வழிகளில் கூடுதலாக சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்ஜினியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். யாத்திரை செல்லும் வழிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவேக்குமார் என்ற சிக்கன் கடைக்காரர் கூறும் போது, ''பிசினசுடன் விழாக்களை இணைக்கக் கூடாது. அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். அதற்காக, ஓரிரு நாட்கள் எங்கள் கடைகளை அடைக்க தயாராக உள்ளோம். ஆனால், நீண்ட நாட்களுக்கு அடைப்பது சிரமம் தான்,'' என்றார்.






      Dinamalar
      Follow us