ADDED : ஜன 04, 2025 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இளம் மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
துவாரகா மாவட்டம் டப்ரியில் வாடகை வீட்டில் வசித்தவர் தீபா, 24. நேற்று முன் தினம், உடல் அழுகிய நிலையில் அவரது உடலை போலீசார் மீட்டனர். தீபாவின் தந்தை அசோக் சவுகான், தன் மகளை அவரது கணவர் தன்ராஜ் கொலை செய்து விட்டதாக புகார் கூறியுள்ளார். தன்ராஜூக்கும் தீபாவுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியின் இரண்டு வயது குழந்தையை, தீபாவின் தாய்மாமா வளர்த்து வருகிறார்.
இதுகுறித்து, கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தன்ராஜை தேடி வருகின்றனர்.
உடற்கூறு ஆய்வுக்குப் பின், தீபா உடல் அவரது குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் டப்ரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

