ADDED : பிப் 13, 2024 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவாஜி நகர்: சிவாஜி நகர் ஓம் சக்தி கோவிலில், ஓம் வராஹி அம்மன் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் அமைந்துள்ளது ஓம் சக்தி கோவில். இக்கோவிலில் ஓம் வராஹி அம்மன் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
வரும் 16ம் தேதி மாலை 4:00 மணிக்கு வராஹி அம்மன் ஹோமம், அம்மன் ஊர்வலம் நடக்கிறது. பின், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.
17ம் தேதி காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ஓம் சக்தி ஹோமம், மஹா வாராஹி ஹோமம் நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு சமபந்தி போஜனம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய நிறுவனர் சக்தி சண்முகம் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.