ADDED : டிச 13, 2024 05:35 AM

பெங்களூரு: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அமெரிக்கா சென்றிருந்தபோது பேசிய கருத்தை கண்டித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதை கண்டித்து நடப்பாண்டு செப்டம்பரில், மாநில காங்கிரஸ் பிரமுகர் மனோகர், ஹைகிரவுண்ட் போலீசில் புகார் செய்திருந்தார்.
புகாரில், 'ராகுல் அமெரிக்கா சென்று, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசி உள்ளார். ஜாதி சர்வே எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்றோ, முஸ்லிமா, கிறிஸ்தவரா என்று கூட தெரியாது. அது பற்றி முதலில் விசாரிக்க வேண்டும்' என்று பசனகவுடா பாட்டீல் எத்னால் பேசியதாக குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நாகபிரசன்னா நேற்று அளித்த தீர்ப்பில், எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்து உத்தரவிட்டார்.

