sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏஐ மாநாட்டில் காங். போராட்டம் தேசிய அவமானம்; பாஜ விளாசல்

/

ஏஐ மாநாட்டில் காங். போராட்டம் தேசிய அவமானம்; பாஜ விளாசல்

ஏஐ மாநாட்டில் காங். போராட்டம் தேசிய அவமானம்; பாஜ விளாசல்

ஏஐ மாநாட்டில் காங். போராட்டம் தேசிய அவமானம்; பாஜ விளாசல்

34


UPDATED : பிப் 20, 2026 06:02 PM

ADDED : பிப் 20, 2026 04:47 PM

Google News

34

UPDATED : பிப் 20, 2026 06:02 PM ADDED : பிப் 20, 2026 04:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டம் தேசத்திற்கு அவமானம் என்று பாஜ விமர்சித்துள்ளது.

டில்லியில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்று உள்ளனர்.

இந் நிலையில், பாரத் மண்டபத்தில் இன்று இளைஞர் காங்கிரசார் நுழைந்து திடீரென போராட்டம் நடத்தி உள்ளனர். தாங்கள் அணிந்திருந்த மேல்சட்டையை கழற்றிவிட்ட அவர்கள், இந்தியா, அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பிரதமர் மோடி, டிரம்ப் ஆகியார் படங்கள் அச்சிடப்பட்ட வெள்ளை டி சர்ட்டுகளை அணிந்த படியே நடந்து சென்றனர்.

எதிர்பாராத இந்த போராட்டத்தால் மாநாடு நடைபெறும் அப்பகுதியில் திடீர் சலசலப்பு எழுந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

காங்கிரசின் இந்த போராட்டத்தை பாஜ வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து பாஜ தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் அமித் மாளவியா கூறுகையில், அரசியல் எதிர்ப்பு என்பது ஜனநாயக உரிமை. அதற்காக இப்படி செய்வது என்பது ஒரு தேசிய அவமானம்.

காங்கிரஸ் இதற்கு வெட்கப்பட வேண்டும். மதிப்புமிக்க ஒரு மாநாட்டை இந்தியா நடத்தும் நேரத்தில் கண்ணியத்திற்கு எதிரான ஒரு செயலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. நம் நாட்டின் உலகளாவிய பிம்பத்தை அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்.,க்கு பயம்

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: இதனை யாரும் போராட்டம் என சொல்ல மாட்டார்கள். ஏஐ மாநாட்டில் அவர்களின் பணியை செய்து கொண்டு உள்ளனர். சிறந்த முறையில், மிக பிரமாண்டமாக ஏஐ மாநாடு நடப்பதை பார்த்து காங்கிரஸ் கட்சிக்கு பயம் வந்துவிட்டது. நாடு வேகமாக வளர்ச்சி பெறும்போது, புதிய வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்கள், மக்களின் குரலை கேட்க வேண்டும். அரசியலை தாண்டி மாநாட்டை பார்க்க வேண்டும். இந்த மாநாட்டுக்கு அனைவரும் ஆதரவு அளிப்பதுடன் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போது தான் நாடு முன்னேறி செல்லும். அனைத்துக்கும் தடையை ஏற்படுத்தும் மனநிலையில் இருந்தால், அவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.








      Dinamalar
      Follow us