ADDED : ஏப் 24, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சன்சத் சவுக்:வரலாற்று சிறப்புமிக்க டில்லி சட்டசபையை தேசிய பாரம்பரிய தளமாக அறிவிப்பது தொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை டில்லி சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.
மேலும் இந்த சந்திப்பின்போது, சட்டசபையின் பாதுகாப்பு, நவீனமயமாக்கலுக்காக செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து லோக்சபா சபாநாயகருடன் விஜேந்தர் குப்தா விவாதித்தார்.
சட்டசபை நுாலகத்தை உடனடியாக டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை உடனடியாக துவங்கும்படி ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார்.
டில்லி சட்டசபையை தேசிய பாரம்பரிய தளமாக அறிவிப்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

