மார்ச் 8ம் தேதி முதல் டில்லி மகளிருக்கு ஜாக்பாட்! ரூ.2500 உதவித்தொகைக்கு பெயர் முன்பதிவு செய்யலாம்
மார்ச் 8ம் தேதி முதல் டில்லி மகளிருக்கு ஜாக்பாட்! ரூ.2500 உதவித்தொகைக்கு பெயர் முன்பதிவு செய்யலாம்
ADDED : மார் 03, 2025 07:11 AM

புதுடில்லி; டில்லியில் மகளிர் உதவித்தொகைக்கான முன்பதிவு மார்ச் 8ம் தேதி முதல் தொடங்குகிறது.
டில்லியின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தா, தேர்தல் பிரசாரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முதல் முன்னுரிமை என்று கூறி இருந்தார். இதையடுத்து, அதற்கான நடவடிக்கைகள் வேகம் எடுக்க தொடங்கி உள்ளன.
அதன் முக்கிய கட்டமாக, மகிளா சம்ரிதி யோஜனாவின் கீழ் மகளிருக்கு ரூ.2500 உதவித்தொகை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதற்கான முன்பதிவு மார்ச் 8ல் தொடங்குகிறது. இந்த தகவலை அமைச்சர் மனோஜ் திவாரி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது;
மார்ச் 8 முதல் யாருக்கு எல்லாம் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும் என்பதற்கான வகைப்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளன. எந்த வழிமுறைகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்படும் என்ற வழிமுறைகள் முன்னெடுக்கப்படும். முன்பதிவு பணிகள் முடிக்க ஒரு மாத காலம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.