sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி மேம்பாட்டு ஆணைய 1,200 வீடுகள் 'சோல்டு அவுட்'

/

டில்லி மேம்பாட்டு ஆணைய 1,200 வீடுகள் 'சோல்டு அவுட்'

டில்லி மேம்பாட்டு ஆணைய 1,200 வீடுகள் 'சோல்டு அவுட்'

டில்லி மேம்பாட்டு ஆணைய 1,200 வீடுகள் 'சோல்டு அவுட்'


ADDED : செப் 28, 2024 07:23 PM

Google News

ADDED : செப் 28, 2024 07:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் 1,200 வீடுகள் விற்றுத் தீர்ந்தன.

இதுகுறித்து, டில்லி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராம்கர் அடுக்குமாடி குடியிருப்பில் குறைந்த வருவாய் பிரிவில் உள்ள 183 வீடுகளில் 153 வீடுகள் விற்று விட்டன. அதேபோல, ரோஹிணியில் 708, நரேலாவில் 250 குறைந்த வருவாய் பிரிவு வீடுகள் விற்றுள்ளன.

பொருளாதாரத்தில் நலிவுற்றோர் பிரிவில் நரேலாவில் 300 வீடுகளும் லோக்நாயக் புரத்தில் 139 வீடுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முன் பதிவு கடந்த 10ம் தேதி துவங்கியது. முதல் நாளிலேயே ஜசோலாவில் கட்டப்பட்டு இருந்த உயர் வருவாய் பிரிவினருக்காக அனைத்து வீடுகளும் விற்று விட்டன.

இந்தத் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

துவாரகா அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரு பென்ட் ஹவுஸ், மூன்று சூப்பர் உயர் வருவய் பிரிவினருக்கான வீடுகள், 18 உயர் வருவாய் பிரிவினருக்காக வீடுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 169 வீடுகளுக்கு 2,000 பேர் முன்பதிவு செய்திருந்தனர். பல சுற்று ஏலத்துக்குப் பிறகே, வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஆணையத்தின் தலைவரும், டில்லி துணைநிலை கவர்னருமான சக்சேனா வழிகாட்டுதல்படி இந்த வீட்டுத் திட்டங்கள் துவக்கப்பட்டன. இந்த வீட்டு வசதி திட்டங்களை சக்சேனா தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார்.

மலிவு விலையில் தரமான வீடுகளை வழங்குவதே டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் நோக்கம். இந்த வீடுகளை வாங்குவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தூய்மையை உறுதி செய்ய உள்ளாட்சி அமைப்புகளுடன் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு வீடு வாங்குவோருக்கு சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களும் கோப்பு உறையில் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us