பிறந்த மறுநாளே பச்சிளம் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை; டில்லி டாக்டர்கள் சாதனை
பிறந்த மறுநாளே பச்சிளம் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை; டில்லி டாக்டர்கள் சாதனை
ADDED : ஜன 30, 2025 09:24 AM

புதுடில்லி: பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு டில்லி டாக்டர்கள், வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
பிறந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை என்பது மிகவும் சவாலான விஷயம். இந்த சூழலில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிறந்து ஒரே நாளான பச்சிளம் குழந்தைக்கு டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
பச்சிளம் குழந்தையின் இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். இதையடுத்து, 3 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சையின் மூலம் பிரச்னையை வெற்றிகரமாக சரி செய்துள்ளனர்.
பின்னர், 16 நாட்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த குழந்தை, அதன்பிறகு, நல்ல உடல்நலத்துடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து குழந்தைகள் இருதய நல டாக்டர் நீரஜ் அஷ்வதி கூறுகையில், 'குழந்தை 20 வார கருவாக இருக்கும் போதுதான் இந்த பிரச்னை தெரிய வந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை குணமடைந்துள்ளது. தொடர்ந்து, குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைகளை தொடர்ந்து வழங்க பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' எனக் கூறினார்.

