sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி தேர்தலில் மகளிருக்கு முக்கியத்துவம் தருவதில்... போட்டா போட்டி! : மாதந்தோறும் நிதியுதவி தருவதாக கட்சிகள் வாக்குறுதி

/

டில்லி தேர்தலில் மகளிருக்கு முக்கியத்துவம் தருவதில்... போட்டா போட்டி! : மாதந்தோறும் நிதியுதவி தருவதாக கட்சிகள் வாக்குறுதி

டில்லி தேர்தலில் மகளிருக்கு முக்கியத்துவம் தருவதில்... போட்டா போட்டி! : மாதந்தோறும் நிதியுதவி தருவதாக கட்சிகள் வாக்குறுதி

டில்லி தேர்தலில் மகளிருக்கு முக்கியத்துவம் தருவதில்... போட்டா போட்டி! : மாதந்தோறும் நிதியுதவி தருவதாக கட்சிகள் வாக்குறுதி


ADDED : ஜன 11, 2025 08:25 PM

Google News

ADDED : ஜன 11, 2025 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,:டில்லி சட்டசபை தேர்தலில், இம்முறை இலவசங்கள் குறித்த வாக்குறுதிக்கே அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், பெண்களுக்கு மாதந்தோறும் நிதி வழங்குவதில்தான் அதிக அக்கறை செலுத்துகின்றன.

டில்லியை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி பட்ஜெட்டிலேயே பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. அதைச் செயல்படுத்தாத நிலையில், தேர்தல் வாக்குறுதியாக மாற்றி, 'மகிளா சம்மன் யோஜனா' திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆளும் பா.ஜ., தலைநகர் டில்லியைக் கைப்பற்ற பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. ஒரு காலத்தில் இலவசங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பா.ஜ.,வும் டில்லி தேர்தலில் வெற்றியை குறிவைத்து, பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அதேபோல, இண்டி கூட்டணியில் இருந்தாலும், டில்லி சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியும், 'பியாரி தீதீ யோஜனா' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

கடந்த 6ம் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, டில்லியில் 83 லட்சத்து 49,645 ஆண் மற்றும் 71 லட்சத்து 73,952 பெண் என, மொத்தம் 1 கோடியே 55 லட்சத்து 24,858 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த டிசம்பர் 16ம் தேதி ஜனவரி 6ம் தேதி வரை, 5.1 லட்சம் பேர் வாக்காளராக சேர விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். அதில் 70 சதவீதம் பெண்கள். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கின்றன.

பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவி திட்டத்தை ஆம் ஆத்மி அறிவித்து, வீடுவீடாக சென்று பதிவு செய்யும் பணியை துவக்கியபோது, பா.ஜ., அதைக் கடுமையாக எதிர்த்தது. அரவிந்த் கெஜ்ரிவால் பங்களா முன், பா.ஜ., மகளிர் அணியினர் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது; இது பொய் வாக்குறுதி என பா.ஜ., கூக்குரலிட்டது.

ஆனால், ஆம் ஆத்மியின் இந்த வாக்குறுதி பெண் வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை உணர்ந்தவுடன், பா.ஜ.,வும் வேறு வழியின்றி இறங்கி வந்தது. கூடுதலாக 400 ரூபாய் சேர்த்து, 2,500 ரூபாயை அறிவித்தது.

கிழக்கு டில்லியில் வசிக்கும் நிஷா வர்மா, “மாதத்துக்கு 2,500 ரூபாய் என்பது பெரிய பணம் அல்ல. ஆனால், இது என் குழந்தைகளுக்கு கூடுதல் புத்தகங்கள் அல்லது அவசரகாலச் செலவுகளுக்கு உதவும். கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பெண்களுக்கு நிதியுதவி அறிவிப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இது, தேர்தல் கால வாக்குறுதியாக மட்டுமே இருந்தால் நிறைவேறுமா என்பது சந்தேகம்தான்,”என்றார்.

தெற்கு டில்லியைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான பிரியா ஷர்மா, “அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பெண்கள் மீது கவனம் செலுத்துவதை பாராட்டுகிறேன். ஆனால், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அல்லது பெண்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டங்களை எதிர்பார்க்கிறேன். மாதந்தோறும் நிதி தருவது தற்காலிக உதவிதான். அது எதிர்காலத்துக்கு உதவாது,”என்கிறார்.

பழைய டில்லியில் வசிக்கும் ருக்சார் அன்சாரி, “கட்சிகளின் இந்த வாக்குறுதியை வரவேற்கிறேன். அதேநேரத்தில், சிறுதொழில் நடத்தும் என்னைப் போன்ற பெண்களுக்கு இது உதவியாகத்தான் இருக்கும். சிறிய தொகை என்றாலும் அதை என் தொழிலில் ஒரு முதலீடாக வைத்து சம்பாதிப்பேன். ஆனால் அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே பெண்களை நினைவில் கொள்கின்றனர். வெற்றி பெற்ற பின் இந்த திட்டம் உடனே நடைமுறைப்படுத்தப்படுமா? என்பதுதான் சந்தேகம்,”என்றார்.

மேற்கு டில்லியைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் ஆஷா குமாரி, “வறுமையில் வாழும் என்னைப் போன்ற பெண்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிதியுதவியால் என் வாழ்க்கையில் சற்று நிம்மதி கிடைக்கும். அதேநேரத்தில் விலைவாசி உயர்வை கட்டுபடுத்துதல், கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்,”என்கிறார்.

ரோகிணியில் வசிக்கும் கீதா தேவி, “என்னைப் போன்ற வருமான ஆதாரம் இல்லாத வயது முதிருந்த பெண்களுக்கு, இந்தத் திட்டம் பெரிய உதவிதான். ஆனால், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மானியவிலை உணவுப் பொருள் உள்ளிட்ட பிற சலுகைகளை அரசு நிறுத்தி விடக்கூடாது,”என்றார் ஆதங்கத்துடன்.

மாதாந்திர நிதியுதவி வாக்குறுதிக்கு பெண்களிடன் ஆதரவு இருந்தாலும், இதர வளர்ச்சிப் பணிகளும் அவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. அதேநேரத்தில், பெண் வாக்காளர்களை மட்டுமே குறிவைத்து இந்த அறிவிப்பை போட்டி போட்டு அறிவித்துள்ள அரசியல் கட்சிகள், முழுமையான தேர்தல் அறிக்கையில் ஆண்களையும் கவரும் திட்டங்களை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

முழுமையான தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடாத நிலையில், பெண்களுக்கான உதவித் தொகை மட்டுமின்றி முதியோருக்கு தனியாருக்கு இலவச சிகிச்சை, ஹிந்து கோவில் பூஜாரி மற்றும் சீக்கிய குருத்வாரா கிரந்தி ஆகியோருக்கு மாதம் 18,000 ரூபாய் நிதியுதவி, அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலருக்கு சம்பளம் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிக்காக பொதுமக்களிடம் கருத்து கேட்டு அறிக்கை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள பா.ஜ., விரைவில் வெளியிடும் என தெரிகிறது. அதேபோல, காங்கிரசும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.






      Dinamalar
      Follow us