'உதய்பூர் பைல்ஸ்' திரைப்படம் டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி
'உதய்பூர் பைல்ஸ்' திரைப்படம் டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி
ADDED : ஜூலை 11, 2025 02:59 AM
புதுடில்லி:பா.ஜ., பிரமுகர் நுபுர் சர்மா கூறிய ஆட்சேபகரமான வார்த்தைகளை ஆதரித்து கருத்து தெரிவித்த, ராஜஸ்தானின் உதய்பூர் நகரை சேர்ந்த டெய்லர் கன்னையா லால், சிலரால் கொல்லப்பட்டார். அந்த வழக்கை ஆதாரமாக வைத்து, உதய்பூர் பைல்ஸ் என்ற படம் ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கன்னையா லால் கொலை வழக்கை, என்.ஐ.ஏ., போலீஸ் விசாரித்து வருகிறது. வரும் 11ம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ள அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என தெரிவித்து, டில்லி ஐகோர்ட்டிலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், 'முதலில் அந்த படம் திரையிடப்படட்டும். அதன் பின் பார்த்துக் கொள்ளலாம்' என்றது.
இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளுக்கு என்ன பதில் என, வழக்கின் மனுதாரர்களிடம் உயர் நீதிமன்றம் கேட்டு, வழக்கை தள்ளி வைத்துள்ளது.