டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை தேர்தல்: இடதுசாரி மாணவர்கள் அமைப்பு வெற்றி
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை தேர்தல்: இடதுசாரி மாணவர்கள் அமைப்பு வெற்றி
UPDATED : ஏப் 28, 2025 07:30 AM
ADDED : ஏப் 27, 2025 08:48 PM

புதுடில்லி: டில்லி ஜவகர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில், நான்கு மத்திய குழு பதவிகளில் மூன்றினை, இடதுசாரி மாணவர்கள் அமைப்பு தன்வசப்படுத்தியது. ஏ.பி.வி.பி., அமைப்பு இணைச் செயலாளர் பதவியை வென்றது.
டில்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்று. இங்குள்ள மாணவர் சங்கத்திற்கான வாக்குப்பதிவு ஏப்.25 அன்று நடைபெற்றது, அதில் 70 சதவீத ஓட்டுப்பதிவு பதிவாகியுள்ளது. தகுதியுள்ள 7,906 மாணவர்களில், சுமார் 5,500 பேர் வாக்களித்தனர்.
தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி, ஏ.ஐ.எஸ்.ஏ- டி.எஸ்.எப் அணியின் நிதீஷ் குமார் 1,702 ஓட்டுக்கள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
ஜனநாயக மாணவர் கூட்டமைப்பின் மணிஷா 1,150 ஓட்டுக்கள் பெற்று துணைத் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் 1,116 ஓட்டுக்கள் பெற்ற, ஏ.பி.வி.பி.,யின் நிட்டு கவுதமை மிக குறுகிய ஓட்டு விதித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பொதுச் செயலாளர் பதவிக்கு, பாத்திமா1,520 ஓட்டுக்கள் பெற்று தேர்வு செய்யப்பட்டார். இணைச் செயலாளர் ஆக ஏபிவிபி அமைப்பை சேர்ந்த வைபவ் மீனா 1,518 ஓட்டுக்கள் பெற்று தேர்ந்து எடுக்கப்பட்டார். நான்கு மத்திய குழு பதவிகளில் மூன்றினை, இடதுசாரி மாணவர்கள் அமைப்பு வென்றுள்ளது.
மொத்தம் உள்ள 45 கவுன்சிலர் பதவி இடங்களில் 23 பதவி இடங்களை பாஜ ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி கைப்பற்றியுள்ளது

