மீண்டும் மீண்டும் அதே மிரட்டல்... லண்டன் செல்லும் விமானம் பிராங்பர்ட்டில் தரையிறக்கம்
மீண்டும் மீண்டும் அதே மிரட்டல்... லண்டன் செல்லும் விமானம் பிராங்பர்ட்டில் தரையிறக்கம்
UPDATED : அக் 19, 2024 02:52 PM
ADDED : அக் 19, 2024 08:33 AM

பிராங்பர்ட்: வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து புதுடில்லியில் இருந்து லண்டன் செல்லும் விமானம் பிராங்பர்ட்டில் தரையிறக்கப்பட்டது.
தலைநர் புதுடில்லியில் இருந்து பயணிகளுடன் லண்டனுக்கு விஸ்தாரா விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்தது.சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் விமானிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பிராங்பர்ட் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிராங்பர்ட் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. தீவிர சோதனையில் வெடிகுண்டு எதுவும் விமானத்தில் இல்லை, அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக லண்டன் சென்று சேர்ந்தது.
இது குறித்து விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது; கடந்த சில நாட்களில் மட்டும் 40 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சோதனையில் அவை அனைத்தும் வெறும் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.