ADDED : பிப் 12, 2025 10:22 PM
ஜாமியா நகர்:போலீசாரை தாக்கி, குற்றவாளி ஒருவர் தப்பிக்க உதவியதாக ஆம் ஆத்மி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமனதுல்லா கான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜாமியா நகரில் கடந்த திங்கட்கிழமை போலீசாரை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமனதுல்லா கானின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். அப்போது, போலீசார் பிடியில் இருந்த குற்றவாளி ஷபாஸ் கான் என்பவர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ., அமனதுல்லா கான் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு அமனதுல்லா கான் நேற்று அனுப்பியுள்ள மின்னஞ்சல் கடிதத்தில், 'என் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஓக்லா தொகுதி எம்.எல்.ஏ.,வான நான், என் தொகுதியில்தான் இருக்கிறேன். தலைமறைவாக இல்லை. தங்கள் தவறை மறைக்க போலீசார், என்னை பொய்யான வழக்கில் சிக்கவைக்கின்றனர்' என கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தென்கிழக்கு காவல்துறை துணை ஆணையர் ரவிக்குமார் சிங், “அமனத்துல்லா கானிடமிருந்து எனக்கு எந்த கடிதமும் வரவில்லை. விசாரணை நடந்து வருகிறது. அவரை (அமனத்துல்லா கான்) கண்காணிக்க முயற்சிக்கிறோம். இதுவரை அவருடன் எந்த தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை,” என்றார்.

