தேர்தலை புறக்கணிக்க சுவர் விளம்பரம் ; டில்லி போலீசார் வழக்கு
தேர்தலை புறக்கணிக்க சுவர் விளம்பரம் ; டில்லி போலீசார் வழக்கு
UPDATED : மே 24, 2024 08:36 AM
ADDED : மே 24, 2024 08:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலை புறக்கணியுங்கள் என சுவர் விளம்பரம் செய்தது தொடர்பாக டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 5 கட்ட லோக்சபா தேர்தல் முடிந்துள்ளது. நாளை (மே-25 ) டில்லி, பீகார். உபி., ஒடிசா உள்பட 7 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் டில்லி பல்கலை வளாகத்தில் தேர்தலை புறக்கணித்து புதிய ஜனநாயகத்தை உருவாக்குங்கள் என்ற வாசகம் எழுதப்பபட்டுள்ளது. இது பல இடங்களில் காணப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விளம்பரம் செய்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.