டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது; 6 வாக்குறுதிகளை அள்ளி வீசினார் கெஜ்ரிவால்!
டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது; 6 வாக்குறுதிகளை அள்ளி வீசினார் கெஜ்ரிவால்!
ADDED : நவ 22, 2024 02:41 PM

புதுடில்லி: வரும் சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியை வெற்றி பெற செய்தால், இலவச மின்சாரம், கல்வி உள்ளிட்ட 6 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அறிவித்தார்.
டில்லியில் தற்போது ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அதிஷி முதல்வராக உள்ளார். டில்லி சட்டசபைக்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆட்சியை தக்க வைக்க, ஆம்ஆத்மி அரசு பாடுபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (நவ.,22) சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாத்தை ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
ஆம்ஆத்மி கட்சிக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் தனது கட்சியால் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்படும். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வந்தால் 6 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். எங்களது வாக்குறுதிகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த, 65 ஆயிரம் கூட்டங்களை ஆம்ஆத்மி நடத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
கெஜ்ரிவால் அறிவித்த ஆறு வாக்குறுதிகள் என்னென்ன?
1. இலவச கல்வி,
2. இலவச மின்சாரம்,
3. இலவச தண்ணீர்,
4. இலவச மருத்துவ சிகிச்சை,
5. இலவச பஸ் பயணம், பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும்,
6. அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு மூத்த குடிமக்களை வழிபாடு செய்ய அழைத்து செல்வோம்.