ADDED : மே 30, 2024 01:53 AM
புதுடில்லி,
அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்கள், ஓட்டுப் பதிவு முடிந்த நிலையில், தேசிய தலைநகர் டில்லி யில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு, 126 டிகிரி வெயில் பதிவானது.
வாட்டி வதைக்கும் வெயில் என்பது இந்தியாவுக்கு புதிதல்ல. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே பருவம் தவறிய மழை, கொளுத்தும் வெயில், பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வெள்ளம் என பருவம் தவறிய இயற்கைச் சீற்றங்களால் பாதிப்புகளை சந்திக்க நேரிட்டுள்ளது.
உலகளாவிய பருவநிலை மாறுபாடு பிரச்னை இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
கேரளாவில் மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதே நேரத்தில் அருகில் உள்ள தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழையும், பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெயிலும் நிலவுகிறது.
நாட்டின் வட மாநிலங்களில் தற்போது கோடைக்காலம் வறுத்தெடுத்து வருகிறது. குறிப்பாக
தொடர்ச்சி 14ம் பக்கம்