கொட்டித்தீர்க்கும் கனமழை; தத்தளிக்கிறது தலைநகர் டில்லி; இன்றும் எச்சரிக்கை!
கொட்டித்தீர்க்கும் கனமழை; தத்தளிக்கிறது தலைநகர் டில்லி; இன்றும் எச்சரிக்கை!
ADDED : செப் 13, 2024 12:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புது டில்லி: தலைநகர் டில்லியின் சில பகுதிகளில் நள்ளிரவு மழை பெய்தது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றும் (வெள்ளிக்கிழமை) கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பதிவாகியுள்ள மழை (மி.மீ) விபரம்
மழையின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தர்ஜங்கில் உள்ள நகரின் முதன்மை வானிலை நிலையத்தில் 29.6 மி.மீ., மழையும், ரிட்ஜ் நிலையத்தில் 69.4 மி.மீ., டில்லி பல்கலைக்கழகம் 56.5 மி.மீ., லோதி சாலையில் 28.2 மி.மீ., ஆயா நகர் 19.5 மி.மீ., பாலம் 18 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
நள்ளிரவு 2.30 மணி முதல் 5.30 மணி வரை பெய்த மழையால் பல சாலைகள் நீரில் மூழ்கின. நகர் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று காலை அலுவலகம் சென்றவர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.