பிஸியான விமான நிலையங்கள்; 9ம் இடத்துக்கு முன்னேறிய டில்லி
பிஸியான விமான நிலையங்கள்; 9ம் இடத்துக்கு முன்னேறிய டில்லி
ADDED : ஜூலை 09, 2025 02:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: உலகின் முதல் 10 பிஸியான விமான நிலையங்களில் டில்லி விமான நிலையம் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டில் அதிக பயணியரை கையாண்ட விமான நிலையங்கள் பட்டியலை சர்வதேச விமான நிலைய கவுன்சிலான ஏ.சி.ஐ., வெளியிட்டுள்ளது. அதில், 7.78 கோடி பயணியரை கையாண்டதன் வாயிலாக, டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.
முந்தைய ஆண்டில், இந்த பட்டியலில் டில்லி விமான நிலையம் 10ம் இடத்தில் இருந்தது.
டாப் 10 விமான நிலையங்கள் - 2024
விமான நிலையம் பயணியர் எண்ணிக்கை (கோடியில்)
அட்லான்டா (அமெரிக்கா) 10.80
துபாய் (யு.ஏ.இ.,) 9.23
டல்லாஸ் (அமெரிக்கா) 8.78
டோக்கியோ (ஜப்பான்) 8.59
லண்டன் (பிரிட்டன்) 8.39
டென்வர்(அமெரிக்கா) 8.23
இஸ்தான்புல் (துருக்கி) 8.01
சிகாகோ (அமெரிக்கா) 8.00
புதுடில்லி (இந்தியா) 7.78
ஷாங்காய் (சீனா) 7.68