sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி உஷ்ஷ்ஷ்... ஜம்மு-காஷ்மீரில் பல கோடி ரூபாயில் பதுங்கு குழிகள்!

/

டில்லி உஷ்ஷ்ஷ்... ஜம்மு-காஷ்மீரில் பல கோடி ரூபாயில் பதுங்கு குழிகள்!

டில்லி உஷ்ஷ்ஷ்... ஜம்மு-காஷ்மீரில் பல கோடி ரூபாயில் பதுங்கு குழிகள்!

டில்லி உஷ்ஷ்ஷ்... ஜம்மு-காஷ்மீரில் பல கோடி ரூபாயில் பதுங்கு குழிகள்!

2


ADDED : மே 18, 2025 01:28 AM

Google News

ADDED : மே 18, 2025 01:28 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகிஸ்தானின் ஏவுகணைகள், இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் பகுதிகளை தாக்கியபோது, அதை முறியடித்தது இந்திய ராணுவம். பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்கள், விமானப்படை பகுதிகளை மட்டுமே இந்தியா தாக்கியது; இதனால், அங்குள்ள மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், இந்தியா - -பாக்., எல்லைக்கு அருகே, பாக்., நடத்திய குண்டு வீச்சில், சில வீடுகள் சேதமடைந்தன; எல்லை பகுதிகளில் வசித்த சிலர் உயிரிழந்தனர்.

இதை சமாளிக்க, ஓர் அதிரடி திட்டத்தை தயார் செய்துள்ளார் பிரதமர். எல்லை பகுதி மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில், பங்கர் எனப்படும் பதுங்கு குழிகள் கட்ட முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம். இதுகுறித்து, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவிடம் பேசியுள்ளார் மோடி.

கிட்டத்தட்ட 50 பதுங்கு குழிகள் கட்டப்பட உள்ளதாம். இதற்காக, 1,000 கோடி ரூபாய் செலவாகும் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பதுங்கு குழியிலும், பல குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்; இங்கு சில நாட்கள் வசிக்க, போதிய ஏற்பாடுகளும் செய்யப்படும்.

போர் காலத்தின்போது, ஒவ்வொரு பதுங்கு குழியிலும், பல குடும்பங்கள் ஒன்றாக தங்க முடியும்.






      Dinamalar
      Follow us