வளர்ந்த இந்தியாவை காண டில்லி உதவும்: அமைச்சர் உறுதி
வளர்ந்த இந்தியாவை காண டில்லி உதவும்: அமைச்சர் உறுதி
ADDED : மார் 11, 2026 02:22 AM

புதுடில்லி, ''சரியான திட்டங்கள், கொள்கைகள், சிறப்பான உள்கட்டமைப்பு திட்டங்கள் வாயிலாக, விக்சித் பாரத் எனும் வளர்ந்த இந்தியாவை அடைவோம்,'' என, டில்லி மாநில சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறினார்.
டில்லியில் நேற்று நடந்த வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற மாநில அமைச்சர் சிர்சா கூறியதாவது:
வளர்ந்த நாடாக நம் இந்தியாவை மேம்படுத்த, மத்திய அரசு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், டில்லி மாநில அரசின் வாயிலாக, வளர்ந்த இந்தியாவை அனைவரும் காணலாம்.
அதற்கான ஒரு அங்கமாக, 75 புதிய சி.எம்., ஸ்ரீ பள்ளிகள் அமைந்துள்ளன. கடந்த ஆண்டில் அந்த பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல, மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு, 1,500 எலக்ட்ரிக் பஸ்கள் மற்றும் டில்லியின் பசுமைப்பரப்பு அதிகரிப்பு போன்றவற்றால், காற்று மாசு மற்றும் போக்கு வரத்து பிரச்னைகளை சமாளிக்க உள்ளோம்.
சரியான திட்டங்கள், கொள்கைகள் மற்றும் சிறப்பான உள்கட்டமைப்பு திட்டங்களால், வளர்ந்த இந்தியாவை காண, மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
டில்லி அரசின் வாயிலாக, வளர்ந்த இந்தியா என்ற திட்டம் சாத்தியமாகும்.
இவ்வாறு அமைச்சர் சிர்சா பேசினார்.
