UPDATED : மே 21, 2024 08:34 PM
ADDED : மே 21, 2024 08:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியின் மின்தேவை வரலாறு காணாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 7717 மெகா வாட்டாக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் 47 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கொளுத்தி வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும், கோடை காலம் என்பதால் மின் நுகர்வு உயர்ந்து வருகிறது. அதன் படி இன்று (மே.21) டில்லியில் ஒரே நாளில் உச்சபட்ச மின்தேவை ‛‛ 7717'' மெகா வாட்டாக பதிவாகி இருந்தது. இந்த மின் நுகர்வு வரலாறு காணாத பதிவு எனவும், கோடை வெப்பம் தொடர்ந்தால் மின் நுகர்வு ''8000'' மெகா வாட் வரை உயரும் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதியன்று டில்லியில் மி்ன்தேவை அதிகபட்ச நுகர்வாக 7,695 ஆக பதிவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

