ADDED : ஜன 06, 2025 03:41 AM
பெங்களூரு: அரசு பஸ்களின் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால், ஆட்டோ கட்டணத்தை உயர்த்தும்படி, நெருக்கடி எழுந்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களின் பஸ் கட்டணம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டது.
நேற்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை, மாநில அரசு முக்கிய காரணமாக கூறுகிறது. இதையே சாதகமாக பயன்படுத்தி, ஆட்டோ பயண கட்டணத்தை உயர்த்தும்படி வலியுறுத்தல் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, சில ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள், பெங்களூரு நகர மாவட்ட கலெக்டரிடம், வேண்டுகோள் விடுத்துள்ளன.
தற்போது ஒரு கி.மீ.,க்கு 30 ரூபாய் கட்டணம் உள்ளது. இதை 40 ரூபாயாக உயர்த்தும்படி, ஆட்டோ ஓட்டுனர் சங்கம் கேட்கிறது. அதே நேரம், கட்டண உயர்வு விஷயத்தில், ஆட்டோ ஓட்டுனர் சங்கங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை. 'பைக் டாக்சியை தடை செய்யும் வரை, கட்டண உயர்வு வேண்டாம்' என, சில சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.