ஜனநாயகமும், அரசியலமைப்பு சட்டமும் நொறுக்கப்படுகின்றன: ஆம்ஆத்மி காட்டம்
ஜனநாயகமும், அரசியலமைப்பு சட்டமும் நொறுக்கப்படுகின்றன: ஆம்ஆத்மி காட்டம்
ADDED : ஜூன் 27, 2024 01:37 PM

புதுடில்லி: பிரதமர் மோடி ஆட்சியில் நாடு முழுவதும் அரசியலமைப்பு சட்டமும், ஜனநாயகமும் நொறுக்கப்படுகின்றன என ஆம்ஆத்மி எம்.பி., சஞ்சய் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உச்சநீதிமன்றத்தால் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட இருந்த நிலையில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளார். மோடியின் சர்வாதிகார ஆட்சியில், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டு கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளது தான்.
கெஜ்ரிவாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அரசு எழுதிக் கொடுத்து ஜனாதிபதி ஆற்றிய உரையில் ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் குறித்து பெரிதாக பேசப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் நாடு முழுவதும் அரசியலமைப்பு சட்டமும், ஜனநாயகமும் நொறுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.