நல்ல பணி செய்தவருக்கு மரியாதை இல்லை: நிதின் கட்காரி
நல்ல பணி செய்தவருக்கு மரியாதை இல்லை: நிதின் கட்காரி
ADDED : பிப் 07, 2024 11:07 AM

புதுடில்லி: ‛‛ நல்ல பணிகளை செய்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. கெட்ட பணிகளை செய்தவர்களுக்கு தண்டனையும் கிடைப்பதில்லை'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு கட்கரி கூறியதாவது: எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, ஒன்று மட்டும் நிச்சயம். நல்ல வேலை செய்பவருக்கு உரிய மரியாதை கிடைக்காது. கெட்ட வேலைகளை செய்பவர் தண்டிக்கப்படுவது கிடையாது. இதனை எப்போதும் நான் நகைச்சுவையாக சொல்வேன். இது போன்ற சித்தாந்தத்தின் சீரழிவு ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல.
விவாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுவது பிரச்னை அல்ல. ஆனால், நல்ல சிந்தனைகள் கிடைப்பதில் தான் பிரச்னை. தங்கள் சித்தாந்தத்தின் அடிப்படையில் உறுதியுடன் நிற்பவர்கள் உள்ளனர். ஆனால், அத்தகையவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சித்தாந்தத்தில் இந்த சீரழிவு ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. இவ்வாறு கட்கரி கூறினார்.

