ADDED : நவ 03, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொட்டபல்லாபூர்; பெங்களூரு அருகே, கோவிலுக்குள் நுழைய ஒரு சமூக மக்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் அருகே மல்லத்தஹள்ளி கிராமத்தில் உள்ள மல்லத்தஹள்ளி அம்மன் கோவில். கிராமத்தில் வசிக்கும் ஒரு சமூகத்தினர், தீபாவளி பண்டிகையை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு சென்றனர். ஆனால் அவர்களை கோவிலுக்குள் நுழைய விடாமல், மற்றொரு சமூகத்தினர் தடுத்தனர்.
இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. பிரச்னை போலீஸ் நிலையம் வரை சென்றது.
நேற்று காலை இரு சமூக தலைவர்களை வரவழைத்து சமாதான பேச்சு நடத்தி, போலீசார் அனுப்பி வைத்தனர்.