ADDED : ஜன 22, 2024 06:13 AM
மைசூரு: முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூரில், லட்ச தீபோற்சவத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடக்கிளது. இதை முன்னிட்டு கர்நாடகாவில் ராமர், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதே போன்று, மைசூரின், அசோக் சாலையில் ராம பக்தர்கள் சார்பில் லட்ச தீபோற்சவம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
ராமோற்சவம் என்ற பெயரில், கெசரேவில் இருந்து, கணபதி ஆஸ்ரமம் வரை ராம ஊர்வலம் நடத்தவும், ஏற்பாடுகள் நடந்தன. முதலில் இந்த நிகழ்ச்சிகளுக்கு, போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.
ஆனால் வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கும் என்ற காரணம் கூறி, கடைசி நேரத்தில் லட்ச தீபோற்சவத்துக்கும், ஊர்வலத்துக்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் பக்தர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.