மாஜி முதல்வர் மகனுக்கு சீட் மறுப்பு: மஹா., காங்.,கில் அதிருப்தி!
மாஜி முதல்வர் மகனுக்கு சீட் மறுப்பு: மஹா., காங்.,கில் அதிருப்தி!
ADDED : அக் 26, 2024 06:40 PM

லத்துார்: மஹாராஷ்டிரா சட்ட மன்ற தேர்தலில், லத்துார் மாவட்டத்தில் உள்ள நிலங்கா தொகுதியில் போட்டியிட, மாஜி முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் நிலஞ்சிகரின் மகன் அசோக் பாட்டீல் நிலஞ்சிகருக்கு, காங்கிரஸ் மேலிடம் சீட் கொடுக்க மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து, அசோக் பாட்டீல் அதிருப்தி அடைந்துள்ளார்.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நவம்பர் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த 3 நாட்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் 48 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது.
அதனை தொடர்ந்து இன்று மாலை 23 வேட்பாளர்கள் கொண்ட 2வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் மேலிடம்.
இன்று வெளியிடப்பட்ட காங்கிரஸ் பட்டியலில் அசோக் பாட்டீல் பெயர் இல்லை.
கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் நிலங்கா தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் சம்பாஜி பாட்டீலிடம் அசோக் பாட்டீல் தோல்வி யடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அசோக் பாட்டீல் கூறுகையில்,
காங்கிரஸ் மேலிடம் எங்களை கைவிட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு, இங்கு தலைவர்கள் இல்லை. சீட் மறுக்கப்பட்டதால், எங்களது ஆதரவாளர்களோடு பேசி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அசோக் பாட்டீல் கூறினார்.