தலைநகர் டில்லியில் கடும் பனிப்பொழிவு; ரயில், விமான சேவை பாதிப்பு
தலைநகர் டில்லியில் கடும் பனிப்பொழிவு; ரயில், விமான சேவை பாதிப்பு
ADDED : ஜன 15, 2025 08:19 AM

புதுடில்லி: வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. ரயில், விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பல வாரங்களாக கடும் பனி நிலவுகிறது. தலைநகர் டில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பனி மூட்டம், கடும் குளிர் நிலவுகிறது.
பார்வையை மறைக்கும் பனிமூட்டம் எதிரொலியாக, ரயில்களை மெதுவாக இயக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதனால், வட மாநிலங்கள் வழியாக இயக்கப்படும் 26 ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருப்பதாக ரயில்வே தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.விமானங்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.
டில்லியில் சாலைகள் தெரியாத அளவுக்கு வெண்புகையாய் பனி சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். வெப்ப நிலையானது 7 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.
அடுத்து வரக்கூடிய நாட்களில் வானிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அடர்பனி மூட்டம் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.