ADDED : மே 06, 2024 10:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரூ: காங்கிரஸ் தொண்டர் கன்னத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் அறைந்த வீடியோவும், படமும் சமூகவலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தோளில் கை வைக்காதய்யா !
ஹவாரியில் உள்ள சவானூர் டவுண் பகுதியில் மாநில துணை முதல்வர் சிவக்குமார் பிரசாரத்திற்கு வந்தார். இவரை பலரும் டிகே, டிகே , டிகேஎஸ் ( டி.கே.சிவக்குமார்)என குரல் எழுப்பி வரவேற்றனர். அப்போது முனிசிபல் கவுன்சிலர் அலாவுதீன் மணியார், துணை முதல்வரின் தோளில் கையை வைத்து அழுத்தினார்.
இதில் ஆத்திரமுற்ற அவர் அலாவுதீன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.தொடர்ந்து ஒருவருக்கொருவர் 'ஸாரி ' தெரிவித்து கொண்டனர். இந்த வீடியோவை பா.ஜ., சமூகவலை தளங்களில் பரவ விட்டு வருகின்றனர்.