ADDED : அக் 03, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், அண்டை மாநிலங்களில் இருந்து நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு உளவுத் துறை தகவல் அளித்தது.
இதையடுத்து, சிந்தவாகு ஆற்றை ஒட்டிய வனப்பகுதியான போட்டேலங்கா, எரான்பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் நேற்று காலை சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் நக்சல்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பல மணி நேரம் நீடித்த சண்டையால், அப்பகுதி போர்க்களமாக மாறியது. இறுதியில், பதுங்கியிருந்த நக்சல்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அவர்களின் முகாமை அழித்த பாதுகாப்புப் படையினர் அதிகளவு வெடிபொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.