தண்டவாளத்தில் கிடந்த டெட்டனேட்டர்கள்: ம.பி.,யில் ராணுவ வீரர்களுடன் வந்த ரயிலை கவிழ்க்க முயற்சி
தண்டவாளத்தில் கிடந்த டெட்டனேட்டர்கள்: ம.பி.,யில் ராணுவ வீரர்களுடன் வந்த ரயிலை கவிழ்க்க முயற்சி
ADDED : செப் 22, 2024 03:33 PM

போபால்: ராணுவ வீரர்களுடன் ரயில் வந்த பாதையில் 10 டெட்டனேட்டர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்ற கோணத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர்களுடன் கர்நாடகாவிற்கு சிறப்பு ரயில் வந்து கொண்டு இருந்தது. ம.பி., மாநிலம் புர்ஹன்பூர் மாவட்டதில் சக்பதா ரயில் நிலையத்தை நெருங்கியபோது, திடீரென சத்தம் கேட்டது. உடனடியாக சுதாரித்த டிரைவர் ரயிலை நிறுத்தினார். கிழே இறங்கி வந்து பார்த்தபோது, அங்கு 10 டெட்டனேட்டர்கள் கிடந்தது தெரிந்தது. இதில் யாருக்கும் காயமில்லை. இது குறித்து ரயில் டிரைவர், ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.