தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தேவர் ஜெயந்தி விழா: பெங்களூரில் கோலாகலம்

தேவர் ஜெயந்தி விழா: பெங்களூரில் கோலாகலம்

தேவர் ஜெயந்தி விழா: பெங்களூரில் கோலாகலம்


ADDED : அக் 29, 2024 07:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 07:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா பெங்களூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கர்நாடக தேவர் சங்கம் சார்பில், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா, 62வது குருபூஜை, மாமன்னர் மருது சகோதரர்களின் 223வது குருபூஜை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது.

சங்கத் தலைவர் சுப்பையா தேவர், கர்நாடக தேவர் வங்கியின் தலைவர் ஞானகுரு தேவர், துணை தலைவர்கள் கனகராஜன், மகேந்திரன், செயலர் அண்ணாதுரை, பொருளாளர் கருப்பசாமி.

ஒருங்கிணைப்பு செயலர் தன்ராஜ், ஒருங்கிணைப்பு இணை செயலர் மனோகர் தேவர்.

இளைஞர் அணி தலைவர் மணிகண்ட பிரபு தேவர், சங்கத்தின் மாநில மகளிர் அணி தலைவி பத்மா, தமிழ்ச் சங்க முன்னாள் செயலர் ராம சுப்பிரமணியன், கர்நாடக தி.மு.க., அவை தலைவர் பெரியசாமி, கர்நாடக தேவர் வங்கியின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவரின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர். சிலம்பாட்டம், தேவராட்டம், மான் கொம்பு ஆட்டம், வாள்வீச்சு, சுருள்வீச்சு, ஒயிலாட்டம், வேல் கம்பு ஆட்டம் நடந்தது. பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களும், ரத்த தானம் செய்தவர்களும் கவுரவிக்கப்பட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

தலைவர் சுப்பையா தேவர் பேசுகையில், ''நமது சமூக மக்கள் பெருந்திரளாக தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்ள வேண்டும். முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம்,'' என்றார்.

மகளிர் அணி தலைவி பத்மா பேசுகையில், ''கர்நாடக தேவர் சங்கம், 14வது ஆண்டில் பயணிக்கிறது. ஒற்றுமை தான் நமது வலிமை. நாம் அனைவரும் ஒரே குடும்பம். கர்நாடகாவில் தமிழக கலாசாரத்தை வளர்த்துள்ளோம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us