ADDED : பிப் 04, 2024 11:16 PM

பெங்களூரு: ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடாவை, அவரது பேரனும், மாநில இளைஞர் அணி தலைவருமான நிகில் குமாரசாமி சந்தித்து பேசினார்.
பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள ம.ஜ.த., அலுவலகத்தில், லோக்சபா தேர்தல் குறித்து தொகுதி தலைவர்களுடன் நிகில் குமாரசாமி ஆலோசனை நடத்தியிருந்தார்.
இது தொடர்பாக விவாதிக்க, பத்மநாபநகரில், நேற்று ம.ஜ.த., தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவை, நிகில் சந்தித்து பேசினார்.
அப்போது, கூட்டத்தில் தலைவர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை முடிவுகள், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், பா.ஜ., தேசிய தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டது குறித்து பேசினார்.
அதற்கு தேவகவுடா, 'தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம். அதற்கு கட்சி தயாராக இருக்க வேண்டும். கட்சியின் இளம் தொண்டர்கள், கட்சி பணியில் ஈடுபட வேண்டும். கட்சிக்காக ஓய்வின்றி உழைக்க வேண்டும். தொண்டர்களை திரட்டும் பணியில் ஈடுபடவும்; தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தவும் அறிவுரை வழங்கினார்.

