sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 மகரஜோதி தரிசனம் பக்தர்கள் பரவசம்

/

 மகரஜோதி தரிசனம் பக்தர்கள் பரவசம்

 மகரஜோதி தரிசனம் பக்தர்கள் பரவசம்

 மகரஜோதி தரிசனம் பக்தர்கள் பரவசம்


ADDED : ஜன 15, 2026 12:17 AM

Google News

ADDED : ஜன 15, 2026 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை: சபரிமலை பொன்னம்பல மேட்டில் நேற்று மூன்று முறை தெரிந்த மகரஜோதியை தரிசித்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் டிச., 30ல் துவங்கிய மகர விளக்கு காலத்தின் நிறைவாக நேற்று மகரஜோதி பெருவிழா நடந்தது.

மாலை 5:30 மணிக்கு திருவாபரண பெட்டிகளை வரவேற்கச் செல்லும் தேவஸ்வம் போர்டு அலுவலர்களுக்கு, தந்திரி மகேஷ் மோகனரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார்.

மாலை 6:25மணிக்கு, 18- ம்படி அருகே வந்த திருவாபரண பவனியில் இரண்டு பெட்டிகளும் மாளிகை புறம் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஒரு பெட்டி, 18 படிகள் வழியாக சன்னிதி வந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் அதை வாங்கி, 6:28 மணிக்கு நடையை அடைத்தனர்; அய்யப்பன் விக்ரகத்தில் அணிவித்து, 6:41 மணிக்கு தீபாராதனை நடத்தினர்.

அந்த நேரத்தில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் ஒளி விட்டு பிரகாசித்தது. தீபாராதனை நடைபெற்று கொண் டிருந்த போதே, பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி தந்தது.






      Dinamalar
      Follow us