sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் யுகாதி விழா ஸ்ரீ சத்ய சாய் விஜயம் கண்டு பக்தர்கள் பரவசம்

/

புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் யுகாதி விழா ஸ்ரீ சத்ய சாய் விஜயம் கண்டு பக்தர்கள் பரவசம்

புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் யுகாதி விழா ஸ்ரீ சத்ய சாய் விஜயம் கண்டு பக்தர்கள் பரவசம்

புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் யுகாதி விழா ஸ்ரீ சத்ய சாய் விஜயம் கண்டு பக்தர்கள் பரவசம்

1


ADDED : மார் 31, 2025 01:12 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:12 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புட்டபர்த்தி: தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு, புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா சன்னிதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தெலுங்கு புத்தாண்டு யுகாதியை முன்னிட்டு, ஆந்திராவைச் சேர்ந்த பார்த்தி யாத்ரீகர்கள், பிரசாந்தி நிலையத்திலுள்ள சன்னிதியில் நேற்று மாலை, 'ஸ்ரீ சத்ய சாய் விஜயம்' என்ற தலைப்பில் ஸ்ரீ சத்ய சாய்பாபா கருத்துகள் பற்றிய கவிதை உணர்வுமிக்க நாடகத்தை வழங்கினர்.

இதில், துாபதி திரிமலாச்சார்யர், செருகுமல்லி காமவதானி, வேலுாரி சிவராம சாஸ்திரி, ஜம்புலமடகா மாதவ ராவ் சாஸ்திரி, கருணாஸ்ரீ ஜந்தியாலா சாஸ்திரி, தீபாயா சாஸ்திரி ஆகியோர் எழுதிய புகழ்பெற்ற கவிதைகளை இந்த அமர்வு வெளிப்படுத்தியது.

ஜந்தியாலா வெங்கடேஸ்வர சாஸ்திரி, காந்திகோட்டா சுப்பிரமணிய சாஸ்திரி, ரத்தினகரம் சேஷம ராஜு கரு, வெங்கடர்கிரி ஆஸ்தான கவி ராம சர்மா, கஸ்துாரி ரங்கநாத சர்மா போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்தனர்.

முன்னதாக, காலையில் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்புகளின் பலதரப்பட்ட சேவை நடவடிக்கைகள் குறித்த விளக்கக் காட்சியுடன் விழா துவங்கியது.

காலையில், பார்த்தி யாத்ரா குழுவினரைச் சேர்ந்த சிறுவர்கள் - சிறுமியர், ஒரு ஆத்மார்த்தமான இசை சிம்பொனியை வழங்கினர்.

அதில், ஸ்லோகங்கள் மற்றும் வாத்தியங்களுடன் பக்தி பாடல்கள் இடம்பெற்றன.

பல மொழிபெயர்ப்புகள் மற்றும் விளக்கங்களில் சாயி காயத்ரியின் துவக்கமும், காந்திகோட்டா சுப்பிரமணிய சாஸ்திரியின், 'விவரிக்கப்பட்ட' துவக்க கதையும் விழாவை மேலும் சிறப்பித்தது.

தொடர்ந்து, ஏராளமான பயனாளிகளுக்கு வீட்டு உபயோக பொருட்களை, நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ ஆர்.ஜே.ரத்னகர், ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்புகளின் மூத்த அதிகாரிகளுடன் வழங்கினார்.

இவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us