sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆரியங்காவு சாஸ்தா-புஷ்கலாதேவி திருக்கல்யாணம் தமிழக, கேரள பக்தர்கள் திரளாக பங்கேற்பு

/

ஆரியங்காவு சாஸ்தா-புஷ்கலாதேவி திருக்கல்யாணம் தமிழக, கேரள பக்தர்கள் திரளாக பங்கேற்பு

ஆரியங்காவு சாஸ்தா-புஷ்கலாதேவி திருக்கல்யாணம் தமிழக, கேரள பக்தர்கள் திரளாக பங்கேற்பு

ஆரியங்காவு சாஸ்தா-புஷ்கலாதேவி திருக்கல்யாணம் தமிழக, கேரள பக்தர்கள் திரளாக பங்கேற்பு

1


ADDED : டிச 26, 2024 06:55 AM

Google News

ADDED : டிச 26, 2024 06:55 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரியங்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா - புஷ்கலா தேவி திருக்கல்யாணம் நேற்றிரவு (டிச.25) கோலாகலமாக நடந்தது. திரளான கேரள, தமிழக பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

வேத தர்மத்தை மக்கள் மனதில் நிலைநிறுத்த, சபரிமலையில் சன்னியாசி, குளத்துப்புழையில் பாலகன், ஆரியங்காவில் கிரகஸ்தன், அச்சன்கோயிலில் அரசனாக தர்மசாஸ்தா அருள்பாலிக்கிறார். அவ்வகையில் ஆரியங்காவில் தன்னை உணர்ந்து ஞானம் பெற்ற புஷ்கலா தேவியை தன்நிலைக்கு உயர்த்தி அவருக்கு ஜீவன்முக்தி என்ற உன்னத நிலையை வழங்குகிறார்.

அதன் வெளிப்பாடாகவே, புஷ்கலாதேவியை பகவான் தன்னோடு ஐக்கியப்படுத்தி மணக்கோலத்தில் காட்சி தருகிறார். சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர் புஷ்கலா தேவி. இதனால் அனைத்து சடங்குகளும் சவுராஷ்டிரா சமூக வழக்கப்படியே நடக்கிறது. அவர்களை திருவாங்கூர் தேவசம் போர்டு சம்பந்தி வீட்டாராக கருதி கவுரவிக்கின்றனர். இதற்காக ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி விழா நடத்துகின்றனர்.

இதன்படி டிச.24ல் இரவு 9:00 மணிக்கு கோயிலின் ராஜகொட்டார மண்டபத்தில் பாண்டியன் முடிப்பு எனப்படும் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று (டிச.25) முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவர், உற்ஸவ மூர்த்திகளுக்கு சகல அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு அனைத்து பரிவார தெய்வங்களுக்கும்வஸ்திர சாத்துப்படி, பொங்கல் படைப்பு நடந்தது. காலை 11:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம், மாலை 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.

இரவு 7:00 மணிக்கு பகவான் காளை வாகனம், அம்பாள் பூங்கோவில் வாகன சப்பரங்களில் எழுந்தருளினர். கோயில் மைதானத்தில் பகவான், அம்பாள் சப்பரங்கள் மூன்று முறை வலம் வந்தன. எதிரெதிரே நின்று ஒரே நேரத்தில் மாலை மாற்றும் வைபவம்நடந்தது. பின்னர் இரு சப்பரங்களும், ஒன்றாக இணைந்து கோயிலை வலம் வந்து, திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தன.

அங்கு சவுராஷ்டிர குலவழக்கப்படி, நேற்று இரவு 10:00 மணிக்கு பகவான் அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். மங்கல குலவை முழங்க, சரண கோஷங்கள், நாதஸ்வர மேளம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. கோகுலத்து மடம் தந்திரி வாசுதேவரு முன்னிலையில், தென்காசி சிவாச்சாரியார் சதாசிவம் அய்யர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

பொதுச் செயலாளர் எஸ்.ஜெ.ராஜன் தொகுத்து வழங்கினார். உற்ஸவ ஏற்பாடுகளை கே.ஆர்.ஹரிகரன், டி.எஸ்.ஆனந்தம், எஸ்.ஜெ.கண்ணன், எஸ்.கே.ரவிச்சந்திரன் செய்துஇருந்தனர்.

திருவிழா ஏற்பாடுகளை தேவஸ்தான சவுராஷ்டிர மகாஜன சங்கத் தலைவர்கள் கே.ஆர்.ராகவன், டி.கே.சுப்ரமணியன், செயலாளர்கள் எஸ்.எஸ்.மோகன் செய்திருந்தனர். இன்று (டிச.26) மண்டல பூஜை நடக்கிறது.

இதையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். மதியம் 12:00 மணிக்கு பகவானுக்கு கலசாபிஷேகம், 1:00 மணிக்கு சர்வராஜ அலங்காரத்தில் தீபாராதனையுடன் பூஜை நிறைவு பெறும்.






      Dinamalar
      Follow us