மாலை 6 மணி! பக்தர்களுக்கு புது அறிவிப்பை வெளியிட்ட திருப்பதி தேவஸ்தானம்
மாலை 6 மணி! பக்தர்களுக்கு புது அறிவிப்பை வெளியிட்ட திருப்பதி தேவஸ்தானம்
ADDED : செப் 23, 2024 05:32 PM

திருப்பதி; பக்தர்கள் அனைவரும் இன்று(செப்.23) மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கேற்றி மந்திரத்தை உச்சரிக்குமாறு திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக கோயிலை சுத்தப்படுத்தும் விதமாக இன்று மகாசாந்தி யோகம் நடத்தப்பட்டது.
8 அர்ச்சகர்கள், 3 ஆகம விதிகள்படி தலைமை அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் தயாராகும் அறை சுத்தப்படுத்தப்பட்டது. சமையலறை புனிதமாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பக்தர்கள் விளக்கேற்ற வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது குறித்து தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது;
பக்தர்கள் இன்று மாலை 6 மணிக்கு விளக்குகளை ஏற்றி, ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் நமோ ஸ்ரீவெங்கடேசாய என தொடங்கும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அந்த பதிவில் மந்திரத்தையும் ஒலி வடிவில் வெளியிட்டு உள்ளது.