ADDED : ஜன 07, 2024 02:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திரா நகர் : இந்திரா நகர் தர்மசாஸ்தா சேவா மண்டலி சார்பில் 20ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி நேற்று பானஸ்வாடி பிரதான சாலையில் உள்ள சீதா ராமா கல்யாண மண்டபத்தில் துவங்கியது.
அதிகாலையில் பிரத்யக் ஷா மஹா கணபதி ஹோமம்; துர்கானந்த் வாத்தியாரின் ருத்ரா ஏகாதசி, மதியம் தம்பதி பூஜை, தீபாராதனை, மாலை சஹாசினியின் லலிதா சஹஸ்ர நாமம், பக்தி பூர்ண குழுவின் விமலா ராமசந்திரனின் தேவி நாராயணீயம் பாராயணம் நடந்தது. இரவில் கொச்சி ரங்கன் குழுவினரின் வஞ்சிப்பாட்டு நடந்தது.
இன்று அதிகாலை மஹா கணபதி ஹோமம்; பிரதோஷம் பூஜா கமிட்டியின் அனந்த நாராயணனின் மஹன்யாச பூர்வகா ருத்ராபிஷேகம் கிராமார்ச்சனை, ஹரிஹர புத்ர சஹஸ்ரநாம அர்ச்சனை; ஆனந்த் பாகவதரின் சாஸ்தா பிரீத்தி, சுவாமி வரவு பாட்டு, மதியம் மஹா மங்களாரத்தி நடக்கிறது.