தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
UPDATED : ஜன 26, 2026 08:18 PM
ADDED : ஜன 25, 2026 06:50 PM

தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உட்பட 131 பேருக்கு, இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல் படுவோரை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.
பத்ம விபூஷண்
பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்துக்கு முந்தைய நாள், பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்தாண்டுக்கான பத்ம விருதுகள், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் 131 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் மறைந்த தர்மேந்திரா; கேரள முன்னாள் முதல்வர் மறைந்த அச்சுதானந்தன், கேரளாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ்; கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான பி.நாராயணன், உ.பி.,யைச் சேர்ந்த வயலின் கலைஞர் என்.ராஜம் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, எஸ்.கே.எம்., குழும நிறுவனரும், தொழிலதிபருமான எஸ்.கே.எம்.மயிலானந்தன், கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பகத்சிங் கோஷியாரி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மறைந்த ஷிபு சோரன் உட்பட 14 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரியர், வேளாண் விஞ்ஞானி கே.ராமசாமி, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார், கால்நடை ஆராய்ச்சியாளர் டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன், மறைந்த ஓவியர் பி.கிருஷ்ணன், சிற்பி காளியப்ப கவுண்டர், டாக்டர் எச்.வி.ஹண்டே.
மிருதங்க கலைஞர்
திருத்தணியைச் சேர்ந்த ஓதுவார் சுவாமிநாதன், எழுத்தாளர் சிவசங்கரி, திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க கலைஞர் பக்தவத்சலம், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்ப கலைஞர் கே.பழனிவேல் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
இது தவிர, நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உட்பட, மொத்தம் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டில்லி ஜனாதிபதி மாளிகையில், மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.
பத்ம ஸ்ரீ விருது பெறும் தமிழர்கள்
காயத்ரி மற்றும் ரஞ்சனி - கலை:
இவர்கள் பிரபல கர்நாடக இசை கலைஞர்களான அறியப்படுகின்றனர். சகோதரிகளான இவர்கள், கர்நாடக இசை பாடகர்களாகவும், வயலின் கலைஞர்களாகவும் தங்கள் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். 30 ஆண்டுகளாக இசைத்துறையில் உள்ள இவர்கள், 'ஸ்வரதுாரா' என்ற புதிய அணுகுமுறையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரே நேரத்தில், பல்வேறு ராகங்களை தொடர்ச்சியாக பாடுவதே இதன் வெளிப்பாடு. மிகவும் சவாலான இந்த அணுகு முறையை, தங்கள் திறமையால் ஒவ்வொரு மேடையிலும் இவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்.வி.ஹண்டே - மருத்துவம்:
சென்னையை சேர்ந்த பிரபல டாக்டரான இவர், எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். தமிழகத்தில் போலியோ மற்றும் தட்டம்மை ஒழிப்பில் பெரும் பங்காற்றியவர். இது தவிர, பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை பெருமளவு குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதவிர, 4,500க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களையும் கட்டமைத்தவர். தற்போது பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ராமசாமி - வேளாண் விஞ்ஞானி: இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னணி வேளாண் விஞ்ஞானி இவர். வேளாண் உயிர்தொழில்நுட்பம், உர-நீர்ப்பாசனம், உயிர் எரிவாயு வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தேசிய கொள்கை வடிவமைப்பில் பங்காற்றியவர். 30க்கும் மேற்பட்ட ஆய்வு திட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.
விஜயகுமார் : முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், காடுகளில் நடக்கும் சண்டை, ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர். நக்சல் பயங்கரவாதம் மற்றும் வீரப்பன் தொடர்பான முக்கிய நடவடிக்கைகளில் உத்திகளை வகுத்து செயல்பட்டவர். சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றவர்.
ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் - கலை : திருமுறை பஜனை பாடல்களில் தனித்த அடையாளம் பதித்தவர். 60 ஆண்டுகளுக்கு மேலான இவரது இசைப் பயணம், பக்தி இசைக்கு உயிரூட்டிய குரலாக உள்ளது. உலகம் முழுதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி, இளம் தலைமுறையினருக்கு திருமுறை மரபை கொண்டு சென்றவர்.
புண்ணியமூர்த்தி நடேசன் - மருத்துவம் : கால்நடை மருத்துவ துறையில் முன்னோடி. பசுக்களை பாதிக்கும் நோய்களுக்கு, நோய் எதிர்ப்பு மருந்துகளை அதிகம் பயன்படுத்தாமல், மூலிகை சிகிச்சை முறைகளை உருவாக்கி, பாரம்பரிய தீர்வுகளை வழங்கினார். இதனால், பாலில் ஆன்டிபயாடிக் மருந்துகளின் எச்சம் குறைந்தது. எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
ஆர்.கிருஷ்ணன் (மறைவுக்கு பின்) - கலை : 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரும்பா ஓவியக் கலையை மீட்டெடுத்த ஓவியர். இயற்கை வண்ணங்களை பயன்படுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை உருவாக்கினார். குரும்பா கலையை உலகறியச் செய்ததில் முக்கிய பங்காற்றினார்.

ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர் - கலை : பிரபலமான வெண்கல சிலை வடிவமைப்பாளர். 50 ஆண்டுகளுக்கும் மேலான தன் கலை பயணத்தில், உலகின் மிகப்பெரிய வெண்கல சிலைகள் உள்ளிட்ட பல படைப்புகளை உருவாக்கி உள்ளார். 100க்கும் மேற்பட்ட கோவில்களின் திருப்பணிகளில் பங்கேற்றுள்ளார்.
சிவசங்கரி - எழுத்தாளர் : தமிழ் இலக்கிய உலகில் மதிப்புக்குரிய எழுத்தாளர். 30க்கும் மேற்பட்ட நாவல்கள், 150 சிறுகதைகள் எழுதியுள்ளார். சாதாரண மனிதர்களின் உணர்வுகள், உறவுகள், வாழ்க்கை மதிப்புகளை தன் எழுத்துக்களில் ஆழமாக பதிவு செய்தவர்.
திருவாரூர் பக்தவச்சலம் - கலை : மிருதங்க இசை மேதை. அதிலும் தஞ்சாவூர் பாணி மிருதங்க இசையில் தனித்திறன் கொண்ட கலைஞர். மிருதங்க கலையின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் உலகளாவிய பரவலுக்கு முக்கிய பங்காற்றியவர்.
காமகோடி - ஐ.ஐ.டி., இயக்குநர் : புகழ்பெற்ற கணினி விஞ்ஞானி. மைக்ரோபிராசசர் எனப்படும், கணினி சிப்பை முதன் முறையாக 'சக்தி' என்ற பெயரில் உள்நாட்டிலேயே உருவாக்கியவர். தொலைத்தொடர்பு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கொள்கை அமலாக்கம் மூலம், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளார்.
சமூக வானொலியின் தந்தைக்கு பத்மஸ்ரீ விருது
சமுதாய வானொலி சேவை தொடங்குவதில் முன்னோடியாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ராமமூர்த்தி ஸ்ரீதருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவையில் வசிக்கும் இவர் 'இந்திய சமூக வானொலியின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார். நாட்டில் முதல் சமூக வானொலி நிலையத்தை துவங்கியவர். உலகிலேயே குழந்தைகளுக்கான மிகப்பெரிய தொடர் கதையை 18 மொழிகளில் வானொலியில் வழங்கியுள்ளார்.
புதுச்சேரி
பழனிவேல் - விளையாட்டு : சிலம்பம் கலையை மீண்டும் பிரபலப்படுத்திய முன்னணி பயிற்சியாளர். பாரம்பரிய போர்க்கலையை இளம் தலைமுறையிடம் கொண்டு செல்ல, மாமல்லன் தற்காப்பு மற்றும் நாட்டுப்புறக் கலை வளர்ச்சி மன்றம் அமைத்தார். இதுவரை 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவரிடம் சிலம்பம் பயிற்சி பெற்றுள்ளனர்.

பத்ம பூஷண்
கே.ஆர்.பழனிசாமி - மருத்துவம்: கள்ளிப்பட்டி
ராமசாமி பழனிசாமி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையில் ஈடுபட்டு
வருகிறார். இரைப்பை குடல் நோய் பிரிவு சிறப்பு டாக்டராக பணியாற்றி வரும்
பழனிசாமி, நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் தன் திறனை நிலை நாட்டி
வருகிறார். 2007ல், இவரது சேவையை பாராட்டி, ஏற்கனவே பத்மஸ்ரீ விருது
வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.கே.எம்.மயிலானந்தன் - சமூக சேவை: ஈரோடு
மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே.எம்., குழும நிறுவனர் மயிலானந்தன், சமூக சேவை
பிரிவில், பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமூகத்தில்,
பொது சுகாதாரம் மற்றும் சமூக நலனை மேம்படுத்த பெரும் பங்களித்த இவர்,
3,000க்கும் மேற்பட்ட கிராமங்களில், யோகா, தியானம், இலவச மருத்துவ முகாம்
நடத்தியுள்ளதுடன், குழந்தைகள் நலனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து
வருகிறார். கடந்த, 2013ல், இவரது சமூக சேவையை கவுரவிக்கும் வகையில்,
இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தற்போது, பத்ம பூஷண் விருதுக்கு
தேர்வாகியுள்ளார்.
பத்ம விபூஷன் விருது பட்டியல்
நடிகர் தர்மேந்திர சிங் தியோல் (கலை) - மஹாராஷ்டிரா
கே.டி.தாமஸ் (பொது விவகாரங்கள்)- கேரளா
ராஜம் ( கலை) - உத்தரபிரதேசம்
நாராயணன் (இலக்கியம் மற்றும் கல்வி) - கேரளா
வி.எஸ்.அச்சுதானந்தன் - (பொது விவகாரங்கள்) - கேரளா
பத்ம பூஷன் விருதாளர்கள்
அல்கா யாக்னிக் - (கலை) -மஹாராஷ்டிரா
பகத் சிங் கோஷ்யாரி- (பொது விவகாரங்கள்) - உத்தரகண்ட்
மம்முட்டி- (கலை) - கேரளா
டாக்டர் நோரி தத்தாத்ரேயுடு - (மருத்துவம்) அமெரிக்கா
பியூஷ் பாண்டே (மறைவு) - (கலை) - மஹாராஷ்டிரா
சதாவதானி ஆர் கணேஷ் - (கலை) - கர்நாடகா
ஷிபு சோரன் (மறைவு)- (பொது விவகாரங்கள்) - ஜார்கண்ட்
உதய கோடக் (வர்த்தகம் மற்றும் தொழில்) - மஹாராஷ்டிரா
வி.கே. மல்ஹோத்ரா (மறைவு) - (பொது விவகாரங்கள்) - டில்லி
வெள்ளப்பள்ளி நடேசன் - (பொது விவகாரங்கள்) - கேரளா
விஜய் அமிர்தராஜ் - (விளையாட்டு) - அமெரிக்கா
பத்ம ஸ்ரீ விருதாளர்கள்
முத்துநாயகம் - (அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்) - கேரளா
அனில் குமார் ரஸ்தோகி - (கலை) - உத்தரப்பிரதேசம்
அன்கே கவுடா - (சமூக சேவை) - கர்நாடகா
அர்மிடா பெர்னாண்டஸ் - (மருத்துவம்) - மஹாராஷ்டிரா
அரவிந்த் வைத்யா - (கலை) - குஜராத்
அசோக் காடே - (வர்த்தகம் மற்றும் தொழில்) - மஹாராஷ்டிரா
அசோக் குமார் சிங் - (அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்) - உத்தரப்பிரதேசம்
அசோக் குமார் ஹல்தார் - (இலக்கியம் மற்றும் கல்வி) மேற்கு வங்கம்
பல்தேவ் சிங் - (விளையாட்டு) - பஞ்சாப்
பகவான்தாஸ் ரைக்வார் - (விளையாட்டு) - மத்திய பிரதேசம்
பாரத் சிங் பாரதி- (கலை) - பீகார்
பிக்லியா லடக்யா திந்தா- (கலை) - மஹாராஷ்டிரா
பிஷ்வா பந்து (மறைவு) - (கலை) - பீகார்
பிரிஜ் லால் பட் (சமூக சேவை) ஜம்மு காஷ்மீர்
புத்த ரஷ்மி மணி ( தொல்லியல்) - உத்தரப்பிரதேசம்
புத்ரி தாதி - (சமூக சேவை) - சத்தீஸ்கர்
சந்திரமௌலி கடமானுகு -(அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்) - தெலங்கானா
சரண் ஹெம்ப்ரம் - (இலக்கியம் மற்றும் கல்வி) - ஒடிசா
சிரஞ்சி லால் யாதவ்- (கலை) - உத்தரப்பிரதேசம்
தீபிகா ரெட்டி- (கலை) - தெலங்கானா
தர்மிக்லால் சுனிலால் பாண்டியா -(கலை)-குஜராத்
கட்டே பாபு ராஜேந்திர பிரசாத் - (கலை)- ஆந்திரா
கப்ருதின் மேவதி ஜோகி -(கலை)- ராஜஸ்தான்
கம்பீர் சிங் யோன்சோன் - (இலக்கியம் மற்றும் கல்வி)- மேற்கு வங்கம்
கரிமெல்ல பாலகிருஷ்ண பிரசாத் (மறைவு) - (கலை) - ஆந்திரா
கோபால் ஜி திரிவேதி - (அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்) - பீகார்
குடுரு வெங்கட் ராவ் - (மருத்துவம்)- தெலங்கானா
ஹாலி வார் - (சமூக சேவை) - மேகாலயா
ஹரி மாதப் முகோபாத்யாய் (மறைவு) - கலை - (மேற்கு வங்கம்)
ஹரிச்சரன் சைக்கியா- (கலை) - அசாம்
ஹர்மன்ப்ரீத் கவுர் - (விளையாட்டு) -பஞ்சாப்
இந்தர்ஜித் சிங் சித்து - (சமூக சேவை) - சண்டிகர்
ஜனார்தன் பாபுராவ் போதே - (சமூக சேவை) - மஹாராஷ்டிரா
ஜோகேஷ் தியூரி - (விவசாயம்)-அசாம்
ஜூசர் வாசி - (அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்) - மஹாராஷ்டிரா
ஜோதிஷ் தேப்நாத் - (கலை) - மேற்கு வங்கம்
பழனிவேல் -(விளையாட்டு)- புதுச்சேரி
கபிந்திர புர்கயஸ்தா (மறைவு) - (பொது விவகாரங்கள்)-அசாம்
கைலாஷ் சந்திர பன்ட் - (இலக்கியம் மற்றும் கல்வி) -மத்திய பிரதேசம்
கலாமண்டலம் விமலா மேனன் -(கலை) - கேரளா
கேவல் கிஷன் தக்ரால் -(மருத்துவம்)- உத்தரப்பிரதேசம்
கேம் ராஜ் சுந்த்ரியால்-(கலை)-ஹரியானா
கொல்லக்கல் தேவகி அம்மா -(சமூக சேவை) - கேரளா
கிருஷ்ணமூர்த்தி பாலசுப்ரமணியன் - (அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்) தெலங்கானா
குமார் போஸ்- (கலை) - மேற்கு வங்கம்
குமாரசாமி தங்கராஜ் - (அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்) -தெலங்கானா
பேராசிரியர் (டாக்டர்) லார்ஸ் கிறிஸ்டியன் கோச் - (கலை)- ஜெர்மனி
லியுட்மிலா விக்டோரோவ்னா கோக்லோவா- (இலக்கியம் மற்றும் கல்வி) -ரஷ்யா
மாதவன் ரங்கநாதன் - (கலை) - மகாராஷ்டிரா
மாகண்டி முரளி மோகன் - (கலை) - ஆந்திரா
மகேந்திர குமார் மிஸ்ரா - (இலக்கியம் மற்றும் கல்வி) - ஒடிசா
மகேந்திர நாத் ராய் - (இலக்கியம் மற்றும் கல்வி) - மேற்கு வங்கம்
மமிதாலா ஜெகதீஷ் குமார் - (இலக்கியம் மற்றும் கல்வி) - டில்லி
மங்களா கபூர் - (இலக்கியம் மற்றும் கல்வி) - உத்தரப்பிரதேசம்
மிர் ஹாஜிபாய் காசம்பாய் - (கலை) - குஜராத்
மோகன் நகர் - (சமூக சேவை) - மத்திய பிரதேசம்
நாராயண் வியாஸ் -(தொல்லியல்)- மத்திய பிரதேசம்
நரேஷ் சந்திர தேவ் வர்மா - (இலக்கியம் மற்றும் கல்வி) - திரிபுரா
நிலேஷ் வினோத்சந்திர மண்டலேவாலா - (சமூக சேவை) - குஜராத்
நுருதீன் அகமது - (கலை) - அசாம்
டாக்டர் பத்மா குர்மெட் - (மருத்துவம்) - லடாக்
பல்கொண்டா விஜய் ஆனந்த் ரெட்டி - (மருத்துவம்) - தெலங்கானா
போக்கிலா லெக்தேபி - (கலை) - அசாம்
பிரபாகர் பசவபிரபு கோரே- (இலக்கியம் மற்றும் கல்வி) - கர்நாடகா
பிரதீக் சர்மா - (மருத்துவம்) - அமெரிக்கா
பிரவீன் குமார் - (விளையாட்டு) - உத்தரப்பிரதேசம்
பிரேம் லால் கௌதம் - (அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்) இமாச்சல பிரதேசம்
பிரசென்ஜித் சாட்டர்ஜி - (கலை) - மேற்கு வங்கம்
ஆர்விஎஸ் மணி - (சிவில் சர்வீஸ்) - டில்லி
ரபிலால் துடு (இலக்கியம் மற்றும் கல்வி) மேற்கு வங்கம்
ரகுபத் சிங் (மறைவு) - (விவசாயம்) - உத்தரப்பிரதேசம்
ரகுவீர் துக்காராம் கேட்கர்- (கலை) -மஹாராஷ்டிரா
ராஜேந்திர பிரசாத் - (மருத்துவம்) - உத்தரப்பிரதேசம்
ராம ரெட்டி மாமிடி (மறைவு) - (கால்நடை பராமரிப்பு) - தெலங்கானா
ராமச்சந்திர கோட்போலே மற்றும் சுனிதா கோட்போலே (இரட்டையர்) - (மருத்துவம்) - சத்தீஸ்கர்
ரதிலால் போரிசாகர் - (இலக்கியம் மற்றும் கல்வி) - குஜராத்
ரோஹித் சர்மா - (விளையாட்டு) - மஹாராஷ்டிரா
எஸ்.ஜி.சுசீலம்மா - (சமூக சேவை) - கர்நாடகா
சாங்யுசாங் எஸ் பொங்கனர்-(கலை) - நாகாலாந்து
சாந்த் நிரஞ்சன் தாஸ்-(ஆன்மிகம்) -பஞ்சாப்
சரத் குமார் பத்ரா- (கலை) -ஒடிசா
சரோஜ் மண்டல்- (மருத்துவம்) - மேற்கு வங்கம்
சதீஷ் ஷா (மறைவு)- (கலை)- மஹாராஷ்டிரா
சத்ய நாராயண் நுவால் - (வர்த்தகம் மற்றும் தொழில்) - மஹாராஷ்டிரா
சவிதா புனியா - (விளையாட்டு) - ஹரியானா
ஷபி ஷாக் - (இலக்கியம் மற்றும் கல்வி)- ஜம்மு காஷ்மீர்
சசி சேகர் வேம்படி - (இலக்கியம் மற்றும் கல்வி) - கர்நாடகா
ஸ்ரீரங் தேவபா லாட் - (விவசாயம்) - மஹாராஷ்டிரா
சுபா வெங்கடேச ஐயங்கார் - (அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்) - கர்நாடகா
ஷியாம் சுந்தர் - (மருத்துவம்) - உத்தரப்பிரதேசம்
சிமான்சல் பத்ரோ- (கலை) - ஒடிசா
சுரேஷ் ஹனகாவடி - (மருத்துவம்) - கர்நாடகா
பிரம்மதேவ் ஜி மஹராஜ் - (சமூக சேவை) -ராஜஸ்தான்
டிடி ஜெகநாதன் (மறைவு) (வர்த்தகம் மற்றும் தொழில்) - கர்நாடகா
தாகா ராம் பீல் - (கலை) - ராஜஸ்தான்
தருண் பட்டாச்சார்யா- (கலை) - மேற்கு வங்கம்
டெச்சி குபின் - (சமூக சேவை) அருணாச்சல பிரதேசம்
த்ரிப்தி முகர்ஜி - (கலை) - மேற்கு வங்கம்
வேம்படி குடும்ப சாஸ்திரி - (இலக்கியம் மற்றும் கல்வி) - ஆந்திரா
விளாடிமிர் மெஸ்ட்விரிஷ்விலி (மறைவு) - விளையாட்டு- ஜார்ஜியா
யும்னம் ஜாத்ரா சிங் (மறைவு) - (கலை) - மணிப்பூர்
- நமது சிறப்பு நிருபர் -

