சமுதாயத்தை பிளவுபடுத்த முயற்சி; தமிழக ஆட்சியாளர்கள் மீது தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
சமுதாயத்தை பிளவுபடுத்த முயற்சி; தமிழக ஆட்சியாளர்கள் மீது தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
ADDED : பிப் 15, 2025 08:24 PM

வாரணாசி:''தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதன் மூலம், தமிழக ஆட்சியாளர்கள் சமுதாயத்துக்குள் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்,'' என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார்.
காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்மேந்திர பிரதான் செய்தியாளர்கள் கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:
புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என்பது விதி. அனைத்து மாநிலங்களும் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.ஏன் தமிழக அரசு மட்டும் ஏற்க மறுக்கிறது? ஏன் அவர்கள் அரசு நிர்வாகத்தின் வரையறைக்கு உட்பட மறுக்கின்றனர்?
ஏன் அவர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர்? அவர்களுக்கு அதில் அரசியல் இருக்கிறது. அவர்கள் சமூகத்துக்குள் பிளவு ஏற்படுத்த விரும்புகிறார்கள். மக்களை பிளவுபடுத்துகிறார்கள்.
இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
'புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படுமா' என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதான், 'சட்டத்தின் விதி அப்படித்தான் இருக்கிறது' என்றார்.

