8 வயது சிறுமி மாரடைப்பால் மரணமா? குஜராத்தில் சோகம்
8 வயது சிறுமி மாரடைப்பால் மரணமா? குஜராத்தில் சோகம்
ADDED : ஜன 10, 2025 06:28 PM
ஆமதாபாத்: குஜராத்தில், 3ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி , பள்ளி வளாகத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆமதாபாத்தின் தல்தேஜ் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்த கார்கி ரன்பாரா என்ற அந்தச்சிறுமி இன்று காலை, பள்ளியில் வகுப்பறை நோக்கி நடந்து சென்றார். அப்போது திடீரென அசவுகரியம் ஏற்பட அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துள்ளார். தொடர்ந்து நெஞ்கை பிடித்தபடி அமர்ந்த அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக ஆசிரியர்கள் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அச்சிறுமி உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.மாரடைப்பு காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், ' இதற்கு முன்பு சிறுமிக்கு எந்தவித உடல்நலக்குறைவும் ஏற்பட்டது கிடையாது. மூச்சுவிடுவதில் பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்,' எனத் தெரிவித்தார்.
சிறுமியின் மரணத்திற்கு காரண் குறித்து அறிய அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் மும்பையில் வசித்து வருகின்றனர். அவர், ஆமதாபாத்தில் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த வாரம், கர்நாடகாவின் சாம்ராஜ் நகரில் 8 வயது சிறுமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.