காலிஸ்தான் அமைப்பிடம் நிதி பெற்றாரா? : கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ.,க்கு பரிந்துரை
காலிஸ்தான் அமைப்பிடம் நிதி பெற்றாரா? : கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ.,க்கு பரிந்துரை
UPDATED : மே 06, 2024 06:52 PM
ADDED : மே 06, 2024 06:41 PM

புதுடில்லி: தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பிடமிருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., விசாரணை நடத்த துணை நிலை கவர்னர் பரிந்துரை செய்துள்ளார்.
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையி்ல் நடந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டில் வைத்தே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு கெஜ்ரிவால் அமெரிக்கா சென்றிருந்த போது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான காலிஸ்தான் அமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியதாகவும், அப்போது தேவிந்தர்சிங் புல்லார் என்ற காலிஸ்தான் பயங்கரவாதி விடுதலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பின் அந்த அமைப்பிடமிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நிதியுதவி பெற்றதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளார்.