மெட்ரோ ரயில் நிலையங்களில் 'டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர்' வசதி
மெட்ரோ ரயில் நிலையங்களில் 'டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர்' வசதி
ADDED : நவ 14, 2024 05:41 AM

பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் பயணியருக்காக, கட்டணத்துடன் கூடிய, 'ஸ்மார்ட் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர்'களை, அறிமுகப்படுத்தி உள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், வருவாயை அதிகரிக்கவும், பயணியர் வசதிக்காகவும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பயணியர் வசதிக்காக, 'ஸ்மார்ட் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர்' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த லாக்கரை, 'சேப்கிளாக்' என்ற நிறுவனம் வடிவமைத்து உள்ளது.
இந்த வசதிகள் மெஜஸ்டிக் நாடபிரபு கெம்பே கவுடா, சிக்பேட் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. உங்கள் சிறிய பைகளை, ஆறு மணி நேரம் வைக்க 70 ரூபாயும்; 12 மணி நேரம் வைக்க 120 ரூபாயும்; பெரிய பைகளாக இருந்தால் ஆறு மணி நேரத்துக்கு 100 ரூபாயும், 12 மணி நேரத்துக்கு 160 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஒருவேளை அந்த நேரத்தை விட கூடுதலாக வைத்திருந்தால், ஒரு மணி நேரத்துக்கு 12 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை வசூலிக்கப்படும். அதிகாலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இங்கு உங்களின் லக்கேஜ்களை வைப்பதற்கு முன், தீவிர சோதனை செய்வர். இதை பயன்படுத்த தெரியவில்லை என்றால், அங்கிருக்கும் மெட்ரோ ஊழியர்கள், உங்களுக்கு உதவுவர். இத்திட்டத்துக்கு பயணியரிடம் இருந்து வரவேற்பு கிடைத்தால், மற்ற ரயில் நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும்.
14_DMR_0014
பயணியர் வசதிக்காக மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கூடிய 'ஸ்மார்ட் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர்'.

