தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தினமலர் கவிதை

தினமலர் கவிதை

தினமலர் கவிதை


ADDED : அக் 03, 2024 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2024 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

...அற்புதமான, அசத்தலான கவிதை...

இன்றைய தினத்தில் தான் அண்ணல் காந்தியடிகள் அவதரித்தார்! லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் கால் பதித்தார். கல்விக்கண் திறந்த காமராஜர் கண் மூடினார். இவ்வாறு தேசப் புகழ் பெற்ற தலைவர்களைக் தந்த நாடு, நமக்கு டி.வி.ஆர்., என்ற திறன்மிகு மனிதரையும் தந்தது.

நுாற்றுப்பதினாறாம் அகவையை அடைந்த அன்பார்ந்த தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்.,க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

வாரமலரில் வாரி வாரி வகையில்லாமல் வழங்குகிறாய்!

ஆன்மிக மலரில் வெள்ளிதோறும் அள்ளி அள்ளி அளிக்கிறாய்!

சிறுவர் மலரில் குறையின்றி நிறையவே தருகிறாய்!

பாரிக்கு அடுத்து இப்பாரினில் புரட்சித்தலைவர் போல் வாரி வழங்கும் வள்ளலாகிறாய்!

ஞாயிறு தோறும் இரு மலரென சுடரொளியாய் தினமலராகிறாய்!

திங்கள் தோறும் 'பட்டம்' பக்கத்தில் திகட்டாமல் பயிற்றுவிக்கிறாய்!

செவ்வாயில் 'நலம் தரும் கல்வி' பக்கத்தில் நலமான நற்செய்திகளை

நவில்கிறாய்!

புதனில் புதுப்புது வாகனங்களை 'கடையாணி' பெயரில் காண்பிக்கிறாய்!

வியாழனில் 'அறிவியல் பக்க'த்தில் அறியாததை அறிவிக்கிறாய்!

வெள்ளியில் 'ஆன்மிக மலரில்' அழகாக ஆனந்தம் அருள்கிறாய்!

சனி தோறும் 'சிறுவர் மலரில்' சிறப்புடனே சிந்திக்கச் செய்கிறாய்!

'டீ கடை பெஞ்சில்' திடமாக இருந்து

தீய ஊழல்வாதிகளின் ஊழ்வினையை உரைக்கிறாய்!

'இது உங்கள் இடத்தில்' இப்போதுள்ள அரசியல்வாதிகளின் முகத்திரையை முறிக்கிறாய்!

பாரபட்சமின்றி பலவகை செய்திகளை பகிர்ந்தளிக்கிறாய்!

பக்கத்துக்குப் பக்கம் புரட்சியின்றி உணர்ச்சியூட்டுகிறாய்!

இன்று போல் என்றும் வாழ்ந்து, எஃகினைக் கவரும் காந்தம் போல்,

எங்கள் உள்ளங்களை எப்போதும் உன் வசம் வைத்திருந்து,

தங்கம் போல் தகதகப்புடன் இத்தரணியிலே,

பங்கமேதுமில்லாமல் நின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us