ADDED : ஆக 31, 2011 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : டில்லியில் பணியாற்றி வரும் போலீசாரில், 1,800 பேர் கடமை தவறியதற்காகவும், 50 பேர் லஞ்சம் வாங்கியதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என புள்ளிவிவர கணக்கு தெரிவிக்கிறது.
லஞ்சம் வாங்கிய, 50 போலீசாரில், 25 கான்ஸ்டபிள்கள், 9 ஹெட்கான்ஸ்டபிள்கள், 6 எஸ்.ஐ.,க்கள்., 7 உதவி எஸ்.ஐ.,க்கள், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் 2 ஊழியர்கள் அடங்குவர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் லஞ்சம் வாங்கியதாக பதிவு செய்துள்ள, 24 வழக்குகளில் 47 போலீசார் சிக்கியுள்ளனர். உதவி கமிஷனர்கள், தொடர்ந்து திடீர் சோதனை செய்து வருகின்றனர்.