நரபலி கொடுக்கும் தலைவர்கள் இயக்குனர் அக்னி ஸ்ரீதர் புகார்
நரபலி கொடுக்கும் தலைவர்கள் இயக்குனர் அக்னி ஸ்ரீதர் புகார்
ADDED : பிப் 04, 2024 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : ''கர்நாடகாவில் நரபலி நடைமுறை இன்னும் உள்ளது. சில அரசியல்வாதிகள் இன்றைக்கும் நரபலி கொடுக்கின்றனர்,'' என திரைப்பட இயக்குனர் அக்னி ஸ்ரீதர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் சில அரசியல்வாதிகள், இப்போதும் நரபலி கொடுக்கின்றனர். இதில் அவர்கள் நேரடியாக தொடர்பு கொள்வதில்லை. ஏழை குடும்பங்களின் பெண்கள், தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் பிச்சைக்காரர்களை பயன்படுத்துகின்றனர். இப்போதும் நரபலிகள் நடக்கின்றன.
'தண்டுபாள்யா' படத்தின் மீது, கொலை குற்றச்சாட்டை சுமத்தினர். ஆனால் தண்டுபாள்யா கும்பல், கொலைகள் செய்யவில்லை. இந்த படத்தில் காண்பிக்கப்பட்ட அம்சங்கள் உண்மையானது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.