
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இப்பகுதி மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பேரிடர் ஏற்பட்டு ஓராண்டு கடந்த பின்னும், பாதிப்பில் இருந்து மீளவில்லை. மத்திய அரசு அளித்த நிதி போதுமானதாக இல்லை. எனவே, அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பிரியங்கா லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
நடவடிக்கை தேவை!
பாகிஸ்தானுடன், 1971ல் நடந்த போரின்போது, 'உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி போரை தடுத்து நிறுத்துங்கள்' என, அப்போதைய பிரதமர் இந்திரா, அமெரிக்க அதிபர் நிக்சனிடம் கேட்டுள்ளார். ஆனால், ராகுலோ, வரலாற்றை திருத்தி தவறான தகவலை லோக்சபாவில் பேசியுள்ளார். அவர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிஷிகாந்த் துபே லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
தடுக்க தீவிரம்!
சைபர் குற்றங்களை தடுக்க, 'டிஜிட்டல்' நுண்ணறிவு தளம் அமைப்பது உட்பட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் சர்வதேச போலி அழைப்புகள், 97 சதவீதம் குறைந்துள்ளன. ஒரே நபர், பல்வேறு பெயர்களில் பயன்படுத்தி வந்த 82 லட்சத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை துண்டித்துள்ளோம்.
ஜோதிராதித்ய சிந்தியா மத்திய அமைச்சர், பா.ஜ.,

