அமெரிக்காவில் இந்திய மைந்தனுக்கு அவமரியாதை: காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்
அமெரிக்காவில் இந்திய மைந்தனுக்கு அவமரியாதை: காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்
ADDED : செப் 14, 2024 11:36 PM

ஸ்ரீநகர்: அமெரிக்காவில் இந்திய மண்ணின் மைந்தனுக்கு அவமரியாதையை ஏற்படுத்திவிட்டது காங்., என ,இந்தியா டுடே செய்தியாளர் அமெரிக்காவில் காங். கும்பலால் தாக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா எதிர்கட்சி தலைவரும் , காங்., எம்.பி.யுமான ராகுல், நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில் ராகுல் அமெரிக்கா சென்றடைவதற்கு முன் அமெரிக்காவின் டெக்சாசில் காங்., அயலக அணி பொறுப்பாளர் சாம்பிட்ரோடாவை இந்தியா டுடே சேனலின் செய்தியாளர் ரோஹித் சர்மா பேட்டிகான முயன்றார். அப்போது காங்.,கட்சியைச் சேர்ந்த சிலர் அவரிடம் அத்துமீறினர்., மொபைல் போன் உள்ளிட்ட சிலவற்றை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அந்நிய மண்ணில் இந்திய செய்தியாளருக்கு அவமரியாதை ஏற்பட்டுவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இது குறித்து காஷ்மீர் சட்டசபை தேர்தலையொட்டி தோடா மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியது,
அமெரிக்காவில் இந்திய செய்தியாளரை காங்., அவமதித்தது மிருகனத்தின் உச்சம். அந்நிய மண்ணில் இந்திய மைந்தனுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டது. பேச்சு சுதந்திரத்தை மதிப்பதாக கூறிக்கொள்ளும் காங்கிரஸ், கட்சியால் அமெரிக்காவில் இந்தியாவின் மதிப்புபைக் குறைத்து விட்டது என்றார்.
இது குறித்து சாம் பிட்ரோடா கூறியது, யாரையும் தவறாக நடத்தவில்லை. பத்திரிகையாளர்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவதாகவும், பத்திரிகை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதாகவும் நடந்த சம்பவம் சிலருக்கு தவறாக தெரிகிறது என்றார்.

