ADDED : நவ 02, 2025 12:00 AM

தே.ஜ., கூட்டணி அரசு பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல்களில் வெற்றி பெற, போலி தேசியவாத தோற்றத்துடன் பிரசாரம் செய்கிறது. உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முடியாததால், அவர்களின் ஓட்டுகளை திருடுகின்றனர்.
பிரியங்கா லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
விரட்டியடிக்கப்படுவர்!
காங்., - எம்.பி., ராகுல், வாக்காளர் அதிகார யாத்திரையை வழிநடத்தி, ஊடுருவல்காரர்களை பாதுகாக்க முயன்றார். எத்தனை யாத்திரை வேண்டுமானாலும் அவர் மேற்கொள்ளட்டும். ஊடுருவல்காரர்களை விரட்டவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
மக்களின் விருப்பம்!
ஹரியானா, மஹாராஷ்டிர சட்டசபை தேர்தல்களில் தே.ஜ., கூட்டணி ஆட்சியை பிடித்தது. இது, மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, பீஹார் தேர்தலை, நாடே உற்று நோக்குகிறது. இதில், மஹாகட்பந்தன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
அசோக் கெலாட் மூத்த தலைவர், காங்.,

